Canada

கனடா: 4,000 மருத்துவ, சமூக பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை அழைப்பு

ஜூலை 22, 2025 அன்று, கனடா அரசு தனது Express Entry வழியாக 4,000 வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு Permanent Residency-க்கான (PR) Invitation to Apply (ITA) வழங்கியுள்ளது.

இந்த சுற்று, மருத்துவம் மற்றும் சமூக சேவைகளில் பணியாற்றும் நிபுணர்களுக்கே தனித்துவமாக நடத்தப்பட்டத

இந்த தேர்வுக்கான CRS (Comprehensive Ranking System) மதிப்பெண் 475-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது ஜூன் மாதம் நடந்த அதே பிரிவுக்கான கடந்த சுற்றை விட 29 புள்ளிகள் குறைவாக உள்ளது.

இந்த வாய்ப்பைப் பெற, விண்ணப்பதாரர்கள் தங்கள் Express Entry ப்ரொஃபைலை மார்ச் 13, 2025, மதியம் 1:08-க்கு(UTC) முன் உருவாக்கியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அழைக்கப்பட்ட தொழில்கள்:

இந்த சுற்றில் பின்வரும் தொழிலாளர்கள் முன்னுரிமை பெற்றுள்ளனர்:

  • Registered nurses and registered psychiatric nurses
  • General practitioners and family physicians
  • Dentists, pharmacists, physiotherapists and optometrists
  • Psychologists, social workers, and counsellors
  • Licensed practical nurses, medical technologists and technicians
  • Veterinary technicians and veterinarians
  • Massage therapists, chiropractors, dieticians and audiologists
  • Nurse aides and patient service associates
  • Paramedical occupations
  • Pharmacy and therapy assistants

மொத்தமாக, 37 தொழில்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முழுமையான பட்டியலை IRCC தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு (2025) மட்டும் 49,403 ITAs வழங்கப்பட்டுள்ளன. ஜூலை 20 வரை Express Entry Pool-ல் 2.56 லட்சம் விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.

குறைந்த CRS மதிப்பெண் உள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பு:

CRS மதிப்பெண் 500-ஐ விட குறைவாக உள்ளவர்கள், குறிப்பிட்ட தொழில்கள் மூலம் PR பெற Category-based Selection சிறந்த வழியாகும்.

குறைந்தது 6 மாத முழுநேர வேலை அனுபவம்

அந்த வேலை கனடாவிலோ வெளிநாட்டிலோ இருக்கலாம்

வேலை, IRCC-வின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்கள் பட்டியலில் இருக்க வேண்டும்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top