காசாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று 27 நாடுகள் கோரியுள்ளன.
இங்கிலாந்து உட்பட 28 நாடுகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
காசாவில் பொதுமக்களின் துன்பம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என்று அந்த நாடுகள் கூறியுள்ளன.
இஸ்ரேலின் உதவி என்ற திட்டம் ஆபத்தாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள இந்த நாடுகள், உணவை தேடி வரும் மக்களுக்கு உதவிகளை குறைத்து வழங்குவது மற்றும் பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொல்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்கள் என்று இந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், குறித்த நாடுகளின் கண்டங்களை நிராகரித்துள்ளது இந்த கண்டங்கள், ஹமாஸ{க்கு தவறான செய்தியை அனுப்புவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.