அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் இப்போதாவது நீதி வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப் போராடுவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சம உரிமை இயக்கம் கிளிநொச்சி நகரில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.