News

கொடூரமாக கொல்லப்பட்ட அப்பாவிகள்! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய ஐரோப்பிய நாடுகள்

மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தரை வழித் தாக்குதல்களில் இஸ்ரேலின் உதவி நடவடிக்கைகளில் இருந்து உணவைப் பெற முயன்ற நூற்றுக்கணக்கான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலிய நாடுகள் கடும் கண்டனத்தை கூட்டு அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளன.

எனினும், இந்த அறிக்கை உண்மைகளுக்கு புறம்பானது என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க, இஸ்ரேலின் உதவி நடவடிக்கை மனிதாபிமானமற்றது என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

கொடூரமாக கொல்லப்பட்ட அப்பாவிகள்! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய ஐரோப்பிய நாடுகள் | Israel Ground Assault On Gaza Kills Innocents

அத்துடன், இந்த ஆண்டு காசாவில் மனிதாபிமான உதவிக்காக கூடுதலாக 40 மில்லியன் யூரோக்களை ஒதுக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதல் காசாவில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான முயற்சிகளுக்கு விழுந்த பேரிடி என ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உணவு பாதுகாப்பு அமைப்பு 1.5 மில்லியனுக்கும் அதிகமான காசா மக்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அல்லது பட்டினியால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top