பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அரசை பிரான்ஸ் (France) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.
இமானுவேல் மக்ரோனின் அறிவிப்பிற்கு அமெரிக்காவும் (USA) இஸ்ரேலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்ததை பிரித்தானியாவும் ஆதரிப்பதாக பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீன அரசை தாம் ஆதரிப்பதாகவும், மேலும் இதுபோன்ற நீண்டகால அரசியல் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்.
ஆனால் இப்போது, இன்று, துன்பத்தைத் தணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் காசாவில் உள்ள தீவிரமான, நியாயப்படுத்த முடியாத துன்பங்களை நாங்கள் கையாள்கிறோம்.
அதுதான் இன்று நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது ஆபத்தானது மற்றும் தவறானது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியை நாடவில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.