வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தினரால் நீண்ட காலமாக எதிர்கொள்ளப்பட்ட இன அழிப்பு குறித்தும், அதன் நீதி கோரியும், அங்குள்ள எட்டு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று (26) காலை 10.00 மணிக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் அமைதிப்பூர்வமான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, குறித்த போராட்டமானது, வவுனியாவிலும் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.


இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், படுகொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நிலம் மற்றும் வளங்கள் பறிக்கப்பட்ட மக்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் மற்றும் மனித உரிமை இயக்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நாட்டுக்குள் நியாயம் கிடைக்காத சூழலில், பன்னாட்டு சுதந்திர நீதிப்பொறியின் மூலமே நீதி பெற முடியும் என வலியுறுத்தினர்.