News

துருக்கி, சிரியாவில் காட்டுத் தீ

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் காட்டுத்தீ பரவி வருவதால், இருநாட்டு தீயணைப்புப் படையினரும் தங்களது எல்லைகளில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

துருக்கி நாட்டில் கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்கு துருக்கியில் 10 இடங்களில் பரவிய மிகப் பெரியளவிலான காட்டுத் தீயானது கட்டுப்படுத்தப்பட்டதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் யுமாக்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்த விசாரணையில், துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்ததன் மூலம் தீ உருவாகியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேபோன்று சிரியாவின் ஹடாய் மாகாணத்தின், டோர்டியோல் மாவட்டத்தில் கடந்த வௌ்ளியன்று நண்பகல் முதல் காட்டுத் தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வீசும் பலத்த காற்றினால் தீ மேலும் பல இடங்களுக்கு பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 920 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top