தென்கொரியாவின் பெய்து வரும் பலத்த மழைக்கு பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5661 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
தென்கொரியாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. 3 நாட்களை கடந்து பெய்து வரும் மழையால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மழை மேலும் நீடிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மழையின் பாதிப்பில் மக்கள் தவித்து வருகின்றனர். தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு நிலைமை மோசம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லீஜா மியுங், அனைத்து துறை அமைச்சகங்களையும், தயார் நிலையில் இருக்குமாறும், தேசிய பேரிடர் மையத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.
கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், 4 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 13 நகரங்களில் இருந்து 5661 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள 247 கல்வி நிலையங்களுக்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.