News

நியூயோர்க் நகரில் துப்பாக்கிச்சூடு – நால்வர் உயிரிழப்பு, மேலும் ஆறு பேர் படுகாயம்.

நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில்  இன்று (28) மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிதாரியான ஷேன் தமுரா , 27 வயதுடைய லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர். AR-15 வகை துப்பாக்கி மற்றும் குண்டு துளைக்காத ஆடை அணிந்து, 44 மாடிகள் கொண்ட கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் முதலில் கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 33-ஆவது தளத்திற்குச் சென்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் காவல்துறை அதிகாரி ஒருவரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஒருவரும் மற்றும் நான்கு பொதுமக்கள் அடங்குவர்.

மேலும், ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top