பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விபத்து, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டன. இந்த கனமழையால் பாகிஸ்தானில் ஏற்கனவே 80 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
கனமழையால் சிக்கியவர்கள் 262 பேரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மேலும், கனமழையால் வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.