பிரான்சில் துப்பாக்கியால் சுடப்பட்டு புலம்பெயர்வோர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்க திட்டமிடும் பலரும் பிரான்சில் Dunkirk என்னுமிடத்தில் முகாமிடுவர்.
இந்தநிலையில், அங்கு 20 வயதுடைய புலம்பெயர்வோர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரை நோக்கி சுமார் 20 குண்டுகள் சுடப்பட்டதாகவும், அவற்றில் ஏழு அவரது உடலில் பாய்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அவசர உதவிக்குழுவினர் அவரது உயிரைக் காக்க சிகிச்சையளித்தும், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துள்ளார்.
அவரை சுட்டது ஆட்கடத்தல்காரர்கள் என நம்பப்படும் நிலையில், குற்றவாளிகளைத் தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.