News

பிரான்ஸில் காட்டுத் தீ: 100 பேர் காயம், விமான நிலையம் மூடல்

 

பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான மார்ஷெல் நகரில் பயங்கர காட்டுத் தீ பரவிவருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று மார்சேய் நகரத்தின் மேயர் பெனாய்ட் பயான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ‘எக்ஸ்’ இல் விடுத்துள்ள அறிக்கையில், மார்சேய் நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதியில் கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட காட்டுத் தீ பரவிவருகிறது. இத்தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இத்தீயின் விளைவாக பிரான்ஸின் 02வது மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரான்ஸின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூரு ஆகிய 3 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 700 இற்கும் மேற்பட்ட வீரர்களுடன் 220 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகொப்டர்கள், நீர் தெளிக்கும் விமானங்களும் தீயை அணைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளன. 700 ஹெக்டேயர்கள் பரப்பிலான நிலப்பகுதி தீயில் எரிந்துள்ளதோடு பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதடைந்துள்ளன. 400 பேர் பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதோடு, 63 வீடுகளும் சேதடைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top