ரஷ்யாவின் கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பெரும்பாலான கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுனாமி எச்சரிக்கை அமைப்பின் தகவல்படி, “சுனாமி ஆலோசனை” என்பது கடலோரத்தில் தீவிரமான அலையோட்டங்கள் உருவாகலாம் என்பதையும், மக்கள் கரையோரங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்பதையும் குறிக்கிறது.
வடக்குக் கரை மற்றும் ஹைடா க்வாய் தீவுகள் மத்திய கரை மற்றும் வடகிழக்கு வான்கூவர் தீவுகளின் கரை (கிடிமாட், பெல்லா கூலா, போர்ட் ஹார்டி ஆகிய இடங்களும் உட்பட) வான்கூவர் தீவின் மேற்கு கரை (கேப் ஸ்காட் முதல் போர்ட் ரென்ப்ரூ வரை) ஜுவான் டி ஃபூகா நீரிணை (ஜோர்டன் ரிவர் முதல் கிரேட்டர் விக்டோரியா வரையிலும் சானிச் குடாநாட்டும் அடங்கும்)
இதேவேளை, மெட்ரோ வான்கூவர், கற்பகத் தீவுகள் (Gulf Islands), ஸ்டிரெய்ட் ஆஃப் ஜார்ஜியா மற்றும் ஜான்ஸ்டோன் ஸ்டிரெய்ட் ஆகிய பகுதிகள் இந்த ஆலோசனையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவதானிக்க வேண்டிய விடயங்கள்:
• கடலோரங்களில் மிகுந்த அலையோட்டங்கள் ஏற்படக்கூடும்.
• கடலில், கடற்கரையில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.
• இந்த அலையோட்டங்கள் மனிதர்களுக்கு உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
• படகு துறைமுகங்கள், வளைகுடாக்கள், குறுக்கிணைகள் போன்ற பகுதிகளில் மிக ஆபத்தான நிலை காணப்படும்.
தற்போது உருவாகியுள்ள சுனாமி, கடலோர பகுதிகளில் பலத்த அலையோட்டங்களை ஏற்படுத்தக் கூடும் என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவுறுத்தியுள்ளது.