அமெரிக்காவின் மத்திய டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி பேரழிவு வெள்ளத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாகவும், குறிப்பாக கெர் கவுண்டியில் 59 பேர் உட்பட இந்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், 20ற்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக ஒரு கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த சிறுமிகள், காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு- மத்திய டெக்சாஸில், குறிப்பாக சான் அன்டோனியோவில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால், குவாடலூப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இந்த நிலைக்கு காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பலர் வெள்ளத்தில் சிக்குண்டதாகவும், மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி படகுகள் மற்றும் உலங்கு வானூர்திகள்மூலம் மீட்புக் குழுக்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.