இந்தோனேசியாவின் (Indonesia) மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்டவாய் தீவுகளுக்கு அருகில் ஒரு படகு கவிழ்ந்ததில் 11 பேர் காணாமல் போயுள்ளதுடன் 7 பேர் உயிர் பிழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (14) நிலவிய மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் காணாமல் போனவர்களை இந்தோனேசியா மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தேடி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்த நேரத்தில் படகில் 18 பேர் இருந்ததாகவும், அவர்களில் 10 பேர் அரச அதிகாரிகள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காணாமல் போன 11 பேரில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அடங்குதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர், ஆனால் படகு திடீர் புயலில் உயரமான அலைகளால் மோதியதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.