News

ரஷியாவில் விமானம் கீழே விழுந்து விபத்து: 50 பேர் பலி

 

ரஷியாவின் கிழக்கு பதியில் 50 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. சைபீரியாவை தளமாக கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம் ஏ.என்.24 சீன எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தின் டிண்டா நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்தநிலையில், டிண்டா நகrஅத்தை விமானம் நெருங்கும்போது விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் ரேடார் திரைகளில் இருந்து திடீரென விலகி சென்றது. மேலும் விமானத்துடனான தொடர்பு துண்டானது. விமானத்தை தொடர்பு கொள்ள அதிகாரிகள் முயற்சி செய்தினர். ஆனால் அது முடியவில்லை.

விமானத்தில் 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் இருந்ததாக பிராந்திய கவர்னர் வாசிலி ஓர்லோவ் தெரிவித்தார். மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது அமுர் பிராந்தியத்ஹ்டில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது தெரியவந்தது. அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் இருந்தவர்களின் கதி என்ன என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விமான விழுந்து நொறுங்கிய இடம் மலை பகுதி என்பதால், அங்கு மீட்பு ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை என்று டிண்டா விமான நிலைய இயக்குநர் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top