ஈழத்தமிழரை அங்கீகரிப்பதை தடுத்து நிறுத்திய நாடு இந்தியா தான் என பிரித்தானியாவை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், போர்நிறுத்தத்தை முன்மொழிந்து இலங்கை வந்தடைந்தனர்.
மேலும், அவர்கள் பேரழிவுகளை சந்தித்த ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வந்ததாகவும் கூறியிருந்தனர்.
எனினும், மேற்குறிப்பிட்ட இரண்டு முன்மொழிவுகளையும் அப்போது இருந்த இந்திய அரசாங்கம் தடுத்ததாக அரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், பிரான்ஸ் தற்போது பலஸ்தீனத்தை அங்கீகரித்தது போன்று ஈழத்தமிழர்களையும் அங்கீகரிக்க வாய்ப்பு இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.