அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் தேசிய சுகாதார அமைப்பின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்திற்கு இன்று துப்பாக்கியுடன் வந்த நபர் தலைமையக அறைகளை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இந்த சம்பவத்தில் அங்கிருந்த அறைகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி டேவிட் ரோசையும் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் டேவிட் ரோஸ் உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள அறையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் குண்டுபாய்ந்து சடலமாக கிடந்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த போலீஸ் அதிகாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஜோசப் ஒயிட் என தெரிவித்துள்ள போலீசார், அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.