News

அமெரிக்கா பாரில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி, பலர் காயம் ; மர்ம நபருக்கு வலை

 

அமெரிக்காவில் உள்ள பார் ஒன்றில் மர்மநபர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள மொன்டானாவின் அனகோண்டாவில் உள்ள தி ஆவ்ல் பாரில் மர்மநபர் ஒருவர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதையடுத்து பாரில் மது அருந்தி கொண்டு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் 45 வயதான மைக்கேல் பால் பிரவுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாருக்கு அடுத்த வீட்டில் வசித்து வந்தார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து, அப்பகுதியில் கபே நடத்தி நெல்சன் கூறியதாவது: நாங்கள் மொன்டானாவைச் சேர்ந்தவர்கள். எனவே துப்பாக்கிகள் எங்களுக்கு புதிதல்ல. ஆனால் இந்த தூப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். எல்லோரும் மிகவும் பதட்டமாக உள்ளனர், என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top