News

இந்தோனேஷியாவில் பாடசாலை உணவை உண்ட 365 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

இந்தோனேஷியாவில் நகரொன்றிலுள்ள பாடசாலையில் மதிய உணவை உட்கொண்ட 365 மாணவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் இலவச உணவுத் திட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.

மத்திய ஜாவாவின் ஸ்ராகென் பகுதியில் உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதால், அங்குள்ள இலவச மதிய உணவுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 28 பில்லியன் அமெரிக்க டொலர் (21 பில்லியன் பவுண்டு) செலவில் செயல்படும் இந்தத் திட்டம், நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சி குறைபாட்டை (Stunting) தடுக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார வாக்குறுதியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவான மஞ்சள் சாதம், முட்டை பொடிமா, பொரித்த டெம்பே, வெள்ளரிக்காய் மற்றும் பால் அனைத்தும் மைய சமையலறையில் தயாரித்து, நகரின் பல பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு, இதனால் ஏற்பட்ட மருத்துவச் செலவுகளை தானே ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் ஜனவரியில் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top