News

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த புதின் சம்மதிக்கவில்லை என்றால்… டிரம்ப் எச்சரிக்கை

 

உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்து வரும் போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த விவகாரத்தில் புதின் சற்று இறங்கி வந்துள்ளார். இதன்படி, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வருகிற 15-ந்தேதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை டிரம்ப், அவருடைய ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேசும்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நாங்கள் சந்திப்பு ஒன்றை நடத்த இருக்கிறோம். முதல் 2 நிமிடங்களிலேயே ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பது எனக்கு சரியாக தெரிந்து விடும் என டிரம்ப் கூறினார்.

இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க போகிறது. நாம் இன்னும் முன்னேறி செல்வோம். ஒப்பந்தம் ஏற்படுத்துவோம். மிக மிக விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும். அதனை உடனடியாக பார்க்க நான் விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப். மிக கடுமையான விளைவுகள் ஏற்படும். ஆம். கடுமையான விளைவுகள் இருக்கும். அது எப்படி இருக்கும் என நான் கூற வேண்டியிருக்காது. மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து அவர், முதல் கூட்டம் நன்றாக நடந்தால், உடனடியாக 2-வது கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்துவோம். உடனடியாக அதனை நடத்தவே நான் விரும்புவேன் என்றார். புதின் மற்றும் ஜெலன்ஸ்கி பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்திற்கான சாத்தியம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் புதின், அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவர்கள் விரும்பினால் நானும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று டிரம்ப் கூறினார். 2-வது கூட்டம் அதிக ஆக்கப்பூர்வ ஒன்றாக இருக்கும் என்றும் கூறினார். எனினும், நான் விரும்பிய பதில்கள் கிடைக்கவில்லை என்றால் 2-வது கூட்டம் நடைபெறாது என்றும் டிரம்ப் கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top