News

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமாகபோகும் சஜித்தின் மறைகரம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் அரசாங்கத்தில் மூன்றாம் தரத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சித் மத்தும பண்டார தொடர்பில் நிறைய இரகசியங்கள் சொல்ல வேண்டியுள்ளது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துணை அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து விவாதம் நடத்தக் கோரினால், எங்களுக்கும் அதழகம் சொல்ல முடியும் என கூறியுள்ளார்.

இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார். பாதுகாப்பு துணை அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போதும்,  அதன் பின்னர் அரசாங்கத்தை கொண்டு நடத்திய சஜித் மற்றும் அவரின் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள், கைது செய்யப்பட்டவர்களின் விபரம் மற்றும் எண்ணிக்கை, குறித்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்ன? அனைத்தையும் எங்களுக்கு அவர்களிடம் கேட்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர சொல்லுங்கள் என்றார்.

இதற்கு முன்னர் நாம் நாடாளுமன்றில் உயிர்ர ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு மேலதிகமாக பல கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top