News

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்; ஹவுதி பிரதமர் படுகொலை

 

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், ஹவுதி பிரதமரான முஜாகித் அகமது கலேப் அல்-ரஹாவி கொல்லப்பட்டு உள்ளார். இதனை ஹவுதி அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டில் அரசின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதற்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தலைநகர் சனாவுக்கு ரஹாவி சென்றுள்ளார். அப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹவுதி அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது.

இதன்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிரதமர் பலியானார். இந்த தாக்குதலில், அவருடைய முக்கிய உதவியாளர்கள் மற்றும் மந்திரிகளும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஏமன் ஜனாதிபதி அலுவலகமும் உறுதி செய்துள்ளது. பிரதமர் மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்து உள்ளது.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top