Canada

கனடாவில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

கனடா (Canada) மாகாணங்களில் பற்றி எரிந்து வரும் காட்டு தீ காரணமாக ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசத்தை அணிவது அவசியம்

இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை | Top 10 Most Polluted Cities In The World 2025

புகை காரணமாக காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களுக்குள்ள ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக் கவசத்தை அணிவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சஸ்கட்சிவான் (Saskatchewan) , மனிடோபா(Manitoba) , பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia), அல்பிரட்டா(Alberta) மற்றும் ஒன்டாரியோ ( Ontario) மாகாணங்களில் காட்டு தீ அதிகமாக பரவி வருகின்றது.

முதலாம் இணைப்பு

உலகின் முக்கிய நகரங்களில் இரண்டாவது மிகவும் மாசுபட்ட நகரமாக கனடாவின் – டொராண்டோ தரப்படுத்தப்பட்டது.

சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனமான IQAir குறித்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் டொராண்டோவின் காற்று தரம் தற்போது உலகளவில் மிக மோசமானவற்றில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

 

நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

 

கனடாவில் பரவும் காட்டுத் தீ புகை

இதேவேளை கனடாவில் பரவும் காட்டுத் தீ புகை தெற்கு ஒன்டாரியோவின் பெரும் பகுதியை பாதிக்கும் என்றும் இது இன்று செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கனடாவில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை | Top 10 Most Polluted Cities In The World 2025

திங்கட்கிழமை காலை 6 மணியளவில், டொராண்டோ நகர மையத்தின் காற்று தர ஆரோக்கிய குறியீடு (AQHI) ஆறாக இருந்தது, இது மிதமான அபாயமாக கருதப்படுகிறது என்று ஏர் குவாலிட்டி ஒன்டாரியோ தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top