காசாவில் உள்ள 2000 நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களிற்கு தனித்தீவொன்றில் வைத்து சிகிச்சையளிக்கவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தோனேசியா மக்கள் வசிக்காத கலாங் தீவில் உள்ள மருத்துநிலையமொன்றை பாலஸ்தீனியர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக திருத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
யுத்தத்தினால் காயமடைந்த இடிபாடுகளின் கீழ் சிக்குண்டு காயமடைந்த 2000 பாலஸ்தீனியர்களிற்கு இந்தோனேசியா மருத்துவசிகிச்சையை வழங்கும் என அந்த நாட்டு ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியில்லை என தெரிவித்துள்ள அவர் மருத்துவசிகிச்சை முடிந்து காயங்கள் ஆறியதும் அவர்கள் மீண்டும் காசா திரும்புவார்கள் என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த திட்டம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.