மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்த போதிலும் இன்னும் சண்டை முடிவுக்கு வந்தபா டில்லை. இந்த நிலையில், காசாவின் முக்கிய மருத்துவமனையாக உள்ள நாஸர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
போரினிடையே, மருந்துப் பொருள்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு இங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் கொடூரத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.