கொலம்பியாவில் போலீஸ் ஹெலிகாப்டர் மீது அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் தாக்குதல் நடத்தியதில், அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று போலீஸ் அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் மீது ட்ரோன் மூலம் கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தினர். ட்ரோன் மோதியதும் ஹெலிகாப்டர் தீ பற்றி கொண்டது.
இந்த தாக்குதலில் அதிகாரிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 8 பேர் காயம் அடைந்தனர் என்று அந்த நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்தார். காயம் அடைந்த அதிகாரிகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு, அதிருப்தியாளர்களே காரணம் என்று கொலம்பியா ஜனாதிபதி தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.