News

சவூதி அரேபியா பூங்காவில் ராட்டினம் திடீரென இரண்டாக உடைந்து- 20 பேர் காயம்; ஆபத்தான நிலையில் 3 பேர்

சவுதி அரேபியாவின் (Saudi Arabia) தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.இதில் 20 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பூங்காவில், “360 டிகிரி” என்றழைக்கப்படும் ராட்டினர் சுழலும் போது அதை தாங்கும் கம்பம் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது.

இதனால் சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்த நிலையில், இதுதொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top