உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியுடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நாளை திங்கட்கிழமையன்று நடத்தவுள்ள முக்கியமான சந்திப்பில், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையகத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்வரியில் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்பை சந்தித்தபோது செலென்ஸ்கி எதிர்கொண்ட சூடான நிகழ்வு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகவே, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும், நேட்டோ தலைவர்களும், நாளைய சந்திப்பில் இணைகின்றனர்.
ஐரோப்பியத் தலைவர்கள் செலென்ஸ்கியின் பக்கத்தில் இருப்பது, ஐரோப்பாவின் உக்ரைனுக்கு ஆதரவை மீண்டும் நிரூபிக்கிறது,
அத்துடன், உக்ரைனின் விட்டுக்கொடுப்புடன் ரஷ்யாவுடன் செய்ய விரும்புவதாக ட்ரம்ப் கூறும் உடன்படிக்கை ஒன்றுக்கான அபாயம், இந்த சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்கள் இணைவதால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.