செம்மணி அவலங்களின் உண்மைகளை வெளிஉலகுக்கு கொண்டுவந்த முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச சிறைக்குள் அனுபவித்த அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த உண்மைகள் அணைத்தையும் மறைந்த சட்டத்தரணி குமார் பொண்ணம்பலத்திடம் கூறியதாகவும், அதன் பின்னர் அவர் தனக்கு சிறந்த தீர்வை பெற்றுத்தருவதாகவும் அவர், உறுதியளித்ததாகவும் சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அச்சுறுத்தலானது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்கவினால் விடுக்கப்பட்டதாக பகிரங்க உண்மைகளையும் முன்வைத்துள்ளார்.
ஆனால் இறுதியில் குமார் பொண்ணம்பலத்தின் நம்பிக்கையை தாண்டி அவருடைய மரண செய்தியையே அறியகிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
அவ்வாறென்றால் செம்மணி அவலங்கள் தொடர்பில் சோமரத்னவின் வெளிப்பாடுகள் சர்வதேசத்திடம் செல்வது சிறிலங்காவின் இனவாத ஆட்சியாளர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தும் என்ற அச்சம் வியாபித்துள்ளது
படுகொலை உண்மைகளை அறிந்த குமார் பொண்ணம்பலம் படுகொலைசெய்யப்பட்டமையின் சதியில் அக்கால சிறிலங்கா ஆட்சியாளர்களின் சதி காணப்படுகிறது.