News

ஜெர்மனியில் கோர விபத்து: 4 பிரித்தானியர்கள் பலி!

ஜெர்மனியில் நடந்த சாலை விபத்தொன்றில் நான்கு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து, ஜேர்மனியின் ஹெஸ்ஸி(Hesse) மாகாணத்தில் உள்ள காசல்(Kassel) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாலையில் இருந்து கார் விலகி சென்று 30 மீட்டர் தொலைவில் இருந்த மரத்தில் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, காரில் இருந்த ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இருந்து தானாக அவசர சேவைகளுக்கு எச்சரிக்கை அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கோர விபத்து: 4 பிரித்தானியர்கள் பலி! | Germany Accident Four British Died

 

பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போதும் காரில் இருந்த நான்கு பேரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜெர்மனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top