தாய்லாந்து ரெயில் விபத்தில், 9 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் சிறுமி. 7 பேர் பெண்கள் ஆவர்.
தாய்லாந்து நாட்டின் நரதிவாத் மாகாணத்தின் சூ-காய் கோலக் மாவட்டத்தில் இருந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு பாங்காக் நகரை நோக்கி சென்றது.
அப்போது குருங்தெப் அபிவாத் என்ற பகுதியில் சென்றபோது, அந்த ரெயிலில் இருந்த 12 பெட்டிகளில, 10, 11 மற்றும் 12 ஆகிய 3 பெட்டிகள் தடம்புரண்டன. எனினும், அந்த பெட்டிகள் கவிழவில்லை. இந்த விபத்தில், 9 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் சிறுமி. 7 பேர் பெண்கள். ஒருவர் துறவியாவார்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் மற்ற 9 பெட்டிகளில் இருந்த பயணிகள், தாய்லாந்து நாட்டின் ரெயில்வே நிர்வாகத்தின் மாற்று ஏற்பாட்டின் வழியே அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.