News

பிரான்சில் சுற்றுலா சென்ற கார் மீது விழுந்த பாறைகள்: இளம் ஜோடி பலி

பிரான்சில் கார் ஒன்றின் மீது பாறைகள் உருண்டு விழுந்ததில், அந்தக் காரில் பயணித்த இருவர் பலியாகியுள்ளார்கள், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம், பிரான்சிலுள்ள Chamonix என்னுமிடத்துக்கு அருகே கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அந்தக் காரில், பிரான்ஸ் நாட்டவர்களான ஒரு தந்தை, தாய், அந்த தம்பதியரின் மகன் மற்றும் அந்த இளைஞருடைய காதலி ஆகியோர், சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது, சாலையின் ஓரமாக இருந்த மலையிலிருந்து திடீரென பாறைகள் உருண்டு வந்துள்ளன.

அந்தப் பாறைகள் அந்த குடும்பத்தினர் பயணித்த கார் மீது விழ, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளைஞரும் அவரது காதலியும் காருக்குள்ளேயே உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள்.

50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காருக்குள்ளிருந்தவர்களை மீட்க போராடிய நிலையில், காரின் முன் இருக்கையில் இருந்த அந்த வயதான தம்பதியரை அவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அவர்களில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top