News

பிரித்தானிய காவல்துறையின் அதிரடி நடவடிக்கை – நூற்றுக்கணக்கானோர் கைது

பிரித்தானியாவில் (United Kingdom) நோட்டிங் ஹில் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் நோட்டிங் ஹில் (Notting Hill Carnival)திருவிழாவில், வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

“உளவுத்துறை அடிப்படையிலான தலையீடுகள்” என்ற நடவடிக்கையின் கீழ் பிரித்தானிய காவல்துறையினர் கிட்டத்தட்ட 100 பேரை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதன்போது 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 11 துப்பாக்கிகள், 40க்கும் மேற்பட்ட கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கண்காணிப்பு நிபந்தனைகள் மற்றும் காவல்துறை பிணை ஆகியவற்றின் கீழ் 266 பேர் வைக்கப்பட்டுள்ளதுடன், இவர் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த நோட்டிங் ஹில் திருவிழாவில் 4 இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகின.

இவற்றில் 2 நபர்கள் தனித்தனி தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். மேலும் 18 காவல்துறையினர் வரை தாக்கப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவே இந்த ஆண்டு காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை கையில் எடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top