News

புடினை கடுமையாக எச்சரித்த ட்ரம்ப்!

அமைதிக்கு ஒத்துழைக்கவில்லை எனில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அமைதியை ஏற்படுத்த புடின் ஒத்துழைப்பை வழங்குவார் என தான் நம்புவதாகவும் ட்ரம்ப் இதன்போது கூறியுள்ளார்

அத்துடன், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் தான் செய்ய வேண்டியதை செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பேச்சுவார்த்தைளிலும் அவர் நெகிழ்வாக இருக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஜெலென்ஸ்கியும் புடினும் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என ஒருபோதும் தான் கூறமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இரு நாட்டு தலைவர்களுக்கும் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top