தனக்கு எதிராக 14 வழக்குகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எங்கள் மீது தவறு இருப்பதாக ஆதாரங்கள் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அநுர அரசாங்கத்திற்கு மகிந்த சவால் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட மகிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம், அவரை இன்று ஹீரோவாக மாற்றியுள்ளனர்.
நாட்டில் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு வீரனாக ரணில் மாறியுள்ளார். அதற்கான வாய்ப்பினை இந்த அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதாக மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரணில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரை பற்றிய பேச்சுகள் அதிகரித்துள்ளன.
தனக்கு எதிராகவும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. எனினும் அவற்றினால் ஒன்றும் செய்ய முடியவில்லை என மகிந்த தெரிவித்துள்ளார்.