News

மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி யோகராசாகலாறஞ்சினி தெரிவித்துள்ளார்.

இன்று (22) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான எதிர் வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

நாங்கள் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக கடந்த அரசுகாளாலும் அவர்களை சார்ந்திருந்த அரசியல் வாதிகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

எங்களுக்கான நீதியென்பது சர்வதேசத்தினூடாகவே கிடைக்க வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கில் செம்மணி கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுகளின் போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சித்திரவதை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவையாகவோ உயிருடன் புதைகப்பட்டவையாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறான மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும்.

அதே நேரம் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைக்காகவும் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளுக்காகவும் நீதி கிடைக்க ஓரணியில் திரண்டு தங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top