மியான்மரில் கடந்த 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ரக்கைன் பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த 7.4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதியாக சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய பழங்குடியின குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், மொகோக் நகரில் கிளர்ச்சியாளர்கள் தங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கர்ப்பிணிப்பெண் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
ராணுவம் நடத்திய தாக்குதலை ஆயுதமேந்திய கிளர்ச்சிக்குழு, உள்ளூர்வாசிகள் உறுதி செய்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.