மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் கும்பல்களை எதிர்த்துப் போராட அமெரிக்காவின் இராணுவ உதவியை பெறுவது குறித்து அந்நாட்டு செனட்டில் நடந்த விவாதத்தில் மோதல் வெடித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலெஜான்ட்ரோ அலிட்டோ மற்றும் செனட் தலைவர் ஜெரார்டோ பெர்னாண்டஸ் நோரோனாவும் அமர்வின் போது மோதிக் கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராணுவத் தலையீட்டை ஆதரிப்பதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டியதைத் தொடர்ந்தே குறித்த மோதல் ஏற்பட்டுள்ளது.
🚨🇲🇽Une bagarre éclate au sénat Mexicain, alors que ses membres s'insurgent contre l'implication des États Unis dans l'élimination des cartels mexicains.
Certains veulent sauver leur pays, d'autres doivent profiter financièrement de ces cartels pic.twitter.com/5Sv3oNTqsE— Mr Cat (@MrandMrsCAT) August 28, 2025
மோதலின் போது, அலெஜான்ட்ரோ அலிட்டோ, பெர்னாண்டஸை அறைந்ததோடு அவரது உதவியாளர்களில் ஒருவரையும் தாக்கியுள்ளார்.
முன்னதாக, மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் கும்பல்களை கட்டுப்படுத்த அமெரிக்க துருப்புக்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, இது தொடர்பான விவாதம் மெக்சிகோ செனட்டில் நடத்தப்பட்டது.