யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதை முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (23.08.2025) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையினுடைய சட்டப்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கின்றார். இது வரலாற்றினுடைய முதல் அத்தியாயமாக பேசப்படுகிறது.
ஜனாதிபதியும் கைது செய்யப்படலாம் என்ற திருத்தத்தை கொண்டு வந்தவரும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான். யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிப்பதற்கு இலங்கையினுடைய சட்டம் தயாராக இருக்கின்றது. என்பதை நிருபித்திருக்கின்றது.
ஆனாலும் இந்த கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவர கூடும்” என்று கூறியுள்ளார்.