யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக காணப்படும் இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை காலை முதல் மாலை வரையில் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது ஒன்றன் மேல் ஒன்றாக இரு எழும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அதனை சுற்றப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த இரு எலும்புக்கூடுகளும் நாளைய ஞாயிற்றுக்கிழமை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒரு எலும்புக்கூட்டின் நெஞ்சு பகுதியில் மற்றைய எலும்பு கூட்டின் தலை பகுதி காணக்கூடியவாறு அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி சுற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை அவற்றை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னான அகழ்வு பணிகளின் போதும் பின்னி பிணைந்த நிலையில் இரு எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒன்றன் மேல் ஒன்றாக இது வரையில் மூன்று சந்தர்ப்பங்களில் 06 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.