முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கமும் அச்சப்பட வேண்டும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வேறு கட்சியை சேர்ந்த ஒருவர் ஆட்சிக்கு வந்தால், அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான விடயங்களை தேடுவார்கள்.
அது ஒரு நல்ல விடயம் தான். அப்போது தான், அநுரகுமார திஸாநாயக்கவும் சுதந்திரமாக செயற்பட முடியாது.
இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்க உலங்கு வானூர்தியில் தனது தாயைக் காணச் சென்றதாக ஒரு செய்தியை பார்க்க முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.