பாகிஸ்தானில் (Pakistan) தஞ்சம் அடைந்துள்ள பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் (Afghanistan) அகதிகளை, மீண்டும் அவர்களுடைய நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை செப்டம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லை ஒட்டியுள்ள மாகாணங்களான கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இவர்களுக்கு, பாகிஸ்தான் அரசு சார்பில் அடையாள சான்று அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், ஆப்கானிஸ்தான் அகதிகளை மீண்டும் அவர்களின் நாட்டுகே அனுப்பும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து, வரும் செப்டம்பர் அகதிகளாக உள்ள பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோரை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.