News

விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள்

உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது.

அவ்வாறு ஈழதேசத்தில் தேசிய இனமாகிய தமிழர்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட போதுதான் தமிழீழத்தில் வே. பிரபாகரன் என்ற ஒரு வீரத்தமிழன் உதித்தார்.

உலகத்திற்கு அறம் போதித்த வராலாற்று இலக்கியங்களில் தமிழுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் நீண்ட பெரிய வரலாறு உண்டு.

அந்த வரலாற்று தடத்தின் அத்திவாரமாக திகழ்ந்த வே. பிரபாகரன் என்ற பெயர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழின வரலாற்றின் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

உலகிலே எவ்வளவோ போராட்ட இயக்கங்கள் உருவாகி இருந்தாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போல், எந்த ஒரு போராட்ட இயக்கமும் இருந்ததில்லை என்பதற்குப் பல நூறு ஆதாரங்களை அன்று தொட்டு இன்று வரையிலும் அடுக்கடுக்காக முன்வைக்க முடியும்.

காரணம் காலம் கடந்தாலும் மறக்க முடியாத தமிழினத்தின் புல்லரிக்க வைக்கும் வலி படைத்த வீர வரலாற்றின் பக்கங்கள் அது.

இந்த பக்கத்தில் இன்றுவரை தமிழர்களால் மறக்க முடியாத கோவமும் வலியும் நிறைந்த பக்கம்தான் துரோகத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கொன்று வீழ்த்தப்பட்டது.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 மே மாதம் நந்திக்கடலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

தமிழனத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு உயிர் இனத்திற்காக பிரிந்த வலியில் மக்கள் துடிந்திருந்தாலும் தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் வேரூன்றி இருந்தது.

இருப்பினும் தலைவர் உயிரிழந்ததாக அரசால் அறிவிக்கப்பட்ட போது அந்த ஒட்டுமொத்த இனத்தின் நம்பிக்கையும் சிதைக்கப்பட்டு அவர்கள் நிர்கதியாக்கப்பட்டதுடன் அவர் வந்துவிடமாட்டாரா என்ற பாரிய கேள்வியொன்றையும் மக்கள் மனதில் வேரூன்றிய ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

இது அன்றே முடிந்து விட்டதா என்றால் நிச்சயமாக இல்லை காரணம், இன்றுவரை தேசியவாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் “தலைவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்” ஒற்றை நம்பிக்கையை மக்களிடத்தில் தொடர்ந்து விதைத்து கொண்டே இருக்கின்றனர்.

இது அனைத்தையும் இழந்த தமிழ் மக்களை மேலும் உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் தீர்க்கமான ஒரு பதில் இல்லாமல் அவர்களை தொடர்ந்து ஏதோ ஒரு வித்தில் ஏமாற்றும் செயலாகவும் அமைகிறது.

இவ்வாறு உயிருடன் இருப்பதாக பரப்பப்படும் தகவல்கள், உண்மையை அடிப்படையாகக் கொண்ட ரீதியில் இல்லாமல் அரசியல் நோக்கங்கங்களாகவும் உணர்ச்சிவசப்பட்ட ஆதரவாளர்களின் நம்பிக்கைகளாகவும் தொடர்கின்றது.

அந்தவகையில், அவர் உயிருடன் இருக்கின்றார், இல்லை மற்றும் அது பற்றி பேசக்கூடாது போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

உண்மையில் இவ்வாறான வேறுபட்ட கருத்துக்களின் ஊடாக சில தரப்புக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.

விடுதலை புலிகளின் தலைவரின் மரணத்தை, அது குறித்த விடயங்களை காரணம் காட்டி தமிழ் மக்கள் மீது பல புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top