அடுத்த 50 ஆண்டுகளுக்குள் 8 மெக்னிடியூட் அல்லது அதற்கு அதிக அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட 15 சதவீதம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 1000 அடி வரை உயர்வான சுனாமி பேரலை அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமைகள் பாரிய அழிவை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஒரு பெரிய நிலஅதிர்வு 30,000 க்கும் மேற்பட்ட இறப்புகளையும், 170,000 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளையும் சேதப்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
81 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.