இஸ்லாமாபாத் ‘ஆப்பரேஷன் சிந்துார்’ மூலம் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள 15 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள், 90 நாட்களுக்குள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும், ஒன்பது பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த நம் ராணுவம், 100 பயங்கரவாதிகளையும் கொன்று குவித்தது.
இந்த நடவடிக்கை முடிந்து, 90 நாட்களே ஆன நிலையில், பாக்., மீண்டும் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி வருவதாக நம் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவியுடன் பயங்கரவாத முகாம்கள், ஏவுதளங்கள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர புதிய பயங்கரவாத திட்டங்களை வகுக்க, ஜெய்ஷ்- – இ- – முகமது, லஷ்கர் – -இ – -தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் உயர் தளபதிகளுடன், பல ஆலோசனை கூட்டங்களை ஐ.எஸ்.ஐ., உயர் அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
பயங்கரவாத முகாம்கள் மீண்டும் தயாராகியுள்ள நிலையில், நான்கு இடங்களில் ஏவுதளங்கள், ஒரு ட்ரோன் மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
முன்பு ஒரே முகாமில் இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகமாக இருந்தது. இதேபோன்று, தற்போது முகாம்களில் அதிகமான பெண்களையும் குழந்தைகளையும் கேடயங்களாகப் பயன்படுத்த சேர்த்து வருகின்றனர். இதற்காக, ஐ.எஸ்.ஐ., 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.