News

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொலை: 2 பேர் கவலைக்கிடம்

 

பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் கோடோரஸ் டவுன்ஷிப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். சந்தேக நபரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. கொல்லப்பட்ட அதிகாரிகள் எந்த சட்ட அமலாக்க நிறுவனங்களில் பணியாற்றினர் என்பதை அதிகாரிகள்வெளியிட மறுத்துவிட்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top