அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள இயேசு கிறிஸ்துவின் இறுதி நாள் திருச்சபை (LDS) ஆலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் திருச்சபை ஆராதனை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் காரை ஆலயத்துக்குள் மோதி நுழைந்துள்ளார்.
பின்னர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதுடன் ஆலயத்திற்கு தீ வைத்துள்ளார்.இதனால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருகிலுள்ள பெர்டன் நகரத்தைச் சேர்ந்த 40 வயதான தாமஸ் ஜேக்கப் சான்போர்டு என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சான்போர்ட் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதால் வழக்கு தொடரப்படமாட்டாது.எனினும், தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.