News

இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் முக்கிய தீர்மானம்

இலங்கை தொடர்பில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முக்கிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

இன்னும் இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் இந்த தீர்மானம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு ஐக்கிய இராச்சியம் தலைமையிலான இலங்கை தொடர்பான முக்கிய குழுவும், தமது ஆதரவை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், இலங்கையின் விடயங்கள் கொண்டு வரப்படவுள்ளன.

அதேநேரம், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் குறித்த அடுத்த விரிவான அறிக்கை, 2027 செப்டம்பரில் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

 

இந்த தீர்மானத்தின்படி இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் காலமும் நீடிக்கப்படவுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கு இந்த தீர்மானம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மனித புதைகுழி அகழ்வுகளை நடத்துவதற்கு போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்கள் தொடர்பில் சர்வதேச உதவியை நாடவும் இந்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top