News

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய ஆதாரங்களை அழித்த அதிகாரி மீது விசாரணை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்க பல முக்கியமான ஆதாரங்களை மறைத்ததாகக் கண்டறியப்பட்ட ஒரு பாதுகாப்பு பிரிவு தலைவர் மீது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலின் ஆதாரங்களை மறைப்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள நீண்ட விசாரணையை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பிரிவு தலைவர் ஆதாரங்களை மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சாட்சியங்களை மாற்றுவதில் அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உதவியதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் 300 க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்தன.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் பல பாதுகாப்பு பிரிவு திணைக்களங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், பல்வேறு விசாரணைகள் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

நவம்பர் 2019 இல், இந்த விவகாரத்தை விசாரித்த ஏராளமானோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள பிற காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டனர்.

அதன் பிறகு, விசாரணைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளராக ஷானி அபேசேகர மீண்டும் தொடர்புடைய விசாரணைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top